
ஆலய வரலாறு
தொண்டைநாட்டின் காஞ்சி ஆவரண எல்லைக்குட்பட்ட நீர்வளம், நிலவளம், நாவல்மரங்கள் சூழ்ந்த புராதனமான சிவாலயம் அருள்மிகு அழகாம்பிகை ஜம்புகேஸ்வர சுவாமி, 27 விநாயகர் ஆலயங்கள், அகத்திய முனிவர் லோபமுத்ராதேவி, நாயன்மார்கள், முனிவர்கள், நாகர்கள், ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள், போளூர் விடோபா சுவாமிகள். சேஷாத்ரி மகான், காஞ்சி மகா சுவாமிகள் குருவருளுடன் அவரது ஆத்மார்த்த மூர்த்தியாகிய மயிலை கற்பகாம்பாளை, செம்பாக்கம் ஸ்ரீஅழகாம்பிகையாக வழிபட்ட ஆறுமுகம் அடியார் நித்ய தரிசன மனக்குறையை தீர்க்க கனவில் குழந்தையாக பல முறை காட்சியளித்ததால் அவளை இல்லத்தில் 1982ல் குழந்தையாக உற்சவராக வைத்து பூஜிக்கப்பட்ட ஸ்ரீபாலாவின் அருளாசி அனுபவத்தாலும் உருவான ஸ்ரீபாலா ஸ்ரீபீடம் சிறிது சிறிதாக வளர்ந்து ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி, தருணீ மகா திரிபுர சுந்தரி, ஸ்படிக சிவலிங்கம், ஸ்ரீசக்ர மகாமேரு என இல்லத்தில் பிரதிஷ்டையில் இருந்த தெய்வங்களை எங்களது சொந்த இடத்திலேயே தனி ஆலயமாக சந்நிதி அமைத்து அம்பிகை திருமேனிகளை பிரதிஷ்டை செய்து 2009 ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தானம் எனும் வாலைகோட்டம் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி தலமாக திகழ்கிறது, இத்தலத்தில் குழந்தை , குமரி, தாயாக மூன்று திரிபுர சுந்தரியாக செம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி பலப்பல லீலைகள் புரிந்து வருகிறாள்
ஆலய அமைப்பும் இத்தல சிறப்பும் :
பாலையின் திருவருளாலும், குருவருளாலும் ஸ்ரீபாலா எழுந்தருளியுள்ள ஆலயம் இரண்டு அடுக்கு அரண்மணை அமைப்பிலானது. திதிகள் படியாக கொண்டு மாடி சந்நிதியில் ஸ்ரீமாதா லலிதை மூலிகை திருமேனியாகவும், மூலவர் விமானம் ஸ்வர்ண மயமான செப்புத்தகட்டால் ஆனது. மேலும் காமதேனு, (கொடிமரம்) துவஜஸ்தம்பம் ஸ்ரீமத் லலிதா ஸ்ரீசக்ரராஜ சபா கருங்கல் சந்நிதிதானம் ஸ்ரீமத் லலிதா அங்க தேவியர்கள் சூழ அற்புத திருக்கோலத்தில் தேவி எழுந்தருளி உள்ளாள். தற்போது ஸ்தபதியாகிய சுவாமிஜியால் கருங்கல் மண்டபம் மற்றும் விக்கிரகம் செய்யும் திருப்பணி நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் நவராத்திரியில் கொடியேற்றி பிரம்மோற்சவம் நடைபெறும். ஸ்ரீபாலா ஆலயம் கொடியேற்றம், காமேஸ்வரர் லலிதா திருக்கல்யாணம், லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூர சம்ஹாரம், தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் ஸ்ரீவித்யா ஸ்ரீபீடமாகும்.

குருஜி ஸ்ரீசார்யானந்தர்:
இவரது இயற்பெயர் இராஜசேகரன் இளம்பூரண சிவம். சிற்ப ஆகமங்கள், கோயிற் கட்டடக்கலை பயின்ற ஆராய்ச்சியாளர். தமிழ்நாடு ஓவிய நுண்கலை கலைஞர் விருது பெற்றவர். சிற்பாகமச் செம்மல் விருது பெற்றவர். கும்பாபிஷேகம் செய்தல், ஆலய பிரதிஷ்டை யந்திரங்கள் எழுதுதல், நமது வாலைக்கோட்டத்தில் எழுந்தருளியுள்ள அனைத்து பஞ்ச உலோக விக்கிரகங்கள், கற் சிற்பங்கள், விஸ்வரூப மூலிகையம்மனை செய்ய முழுக்க எட்டு ஆண்டுகள் ஆனது. இத்தல அனைத்து தெய்வ சிலைகள், ஆலய கருங்கல் திருப்பணிகளை ஆகம சாஸ்திரப்படி தாமே முன்னின்று வரைந்து, தலைமை ஸ்தபதியாக இருந்து செய்துள்ளார். இவர் திருமுருக கிருபானந்த வாரியார், போளூர் விடோபா சிவராமலிங்க சுவாமிகளிடம் பலமுறை அருளாசி பெற்றவர். இவர் சிவலிங்கத்தை அங்க லிங்கமாக தரித்து நித்தம் இருகால பூஜையுடன் இந்த ஆலயத்தில் ஸ்ரீவித்யா தந்திர முறைப்படியும், சிவாகமப்படியும் பூஜைகளை நடத்துகிறார்.
ஆலய ஸ்தாபகர் :
ஸ்ரீபீடம் வாலைக்கோட்டம் குடும்பத்தினர் செம்பாக்கம்
அழகாம்பிகை அடிமை ஆறுமுகம் வாமதேவ சிவம்
சிவஸ்ரீ இராஜசேகரன் இளம் பூரண சிவம் (சார்யானந்தர்)
அறக்கட்டளை சேவைகள் :
ஸ்ரீபாலா சமஸ்தான ஸ்ரீசக்ரராஜ பூர்ண மகா மேரு அறக்கட்டளை சார்பாக அனைத்து விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அன்னதானம் நடைபெறும். ஏழை எளியவர்களுக்கு வஸ்திர தானம், செம்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி முதன்மை மாணவர்கள் ஆறுபேருக்கு, தொடர்ந்து ஊக்கத்தோகை, பாராட்டு சான்றிதழ் வழங்குதல், பரதம், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை ஊக்குவித்து பரிசளித்தல், புராதன ஆலய சிவத்தல வரலாற்றை புத்தகமாக எழுதி, தலக்காட்சியை வரைந்து வெளியிடுதல், சுற்று வட்டார ஆலய விழாக்காலங்களில் அன்னதானம் வழங்குதல், சிவ தீட்சை வழங்குதல், ஆன்மீக கேள்வி பதில், மனனப்போட்டி நடத்தி பரிசளித்தல், ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு உடை, எழுது பொருட்கள் இனிப்புகள் வழங்குதல், சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் மருத்துவ முகாம்கள் நடத்துதல், வசதியற்ற சமூக மக்கள் பகுதி ஆலயங்களுக்கு குடமுழுக்கு செய்வித்தல், சிற்பகாமம், மற்றும் ஸ்ரீவித்யா உபாசனை சார்ந்த நூல்கள் வெளியிடுதல், புராதன ஆலயங்களுக்கு திருப்பணி செய்தல் முதலிய சமூக நலப்பணிகள் அறக்கட்டளையின் வாயிலாக தொடர்ந்து நடைபெறுகின்றன. இதுவரை 9 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.வாலை கந்தர்வ வேத பாடசாலை மூலம் திருமுறைகள், இசைக்கருவி, பரதம், சிலம்பம் பயிற்சி வகுப்புகள் வார சனி ஞாயிறுகளில் நடைபெறுகிறது
தெய்வங்கள்

ஸ்ரீ உச்சிஷ்ட மகா கணபதி
விநாயகரின் 32 வடிவங்களில் மிக அரிதானதும், உபாசனையில் உயர்ந்ததாகிய ஸ்ரீஉச்சிஷ்ட மகாகணபதி நீலசரஸ்வதியுடன் மூலவர், உற்சவராக எழுந்தருளியுள்ளார்.
திகம்பரராக ஆலய முகப்பில், மூல கணபதியாக தனி சந்நிதியில் ஆறு கரங்களுடன் உச்சிஷ்ட கணபதி எழுந்தருளி தன்னை தரிசித்த மாத்திரத்தில் சகல தோஷம் நீக்கி, விக்னங்களை களைகின்றார்.
சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பெளர்ணமியில் தேன் கலந்த மாதுளை முத்து படைத்து, நான்கின் மடங்காக சதுர் தேங்காய் உடைப்பது சிறப்பு.

ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி (மூலவர்)
சர்வசக்திகளின் குழந்தை வடிவமான ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி, நவகோடி சித்தர்களால் "வாலை" என அழைக்கப்படுகிறார். ஸ்ரீலலிதா மஹா திரிபுர சுந்தரியிலிருந்து தோன்றிய பாலா, ஆலய ஸ்தாபகரின் ஆத்ம மூர்த்தியாக காட்சி தந்து, முதலில் உற்சவராகவும் பின்னர் தனி ஆலயத்தில் மூலவராகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பாலா திரிபுர சுந்தரிக்கான முழுமையான ஒரே ஆலயமாக விமானம் மற்றும் கொடிமரம் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.

ஸ்ரீதருணீ மஹா திரிபுர சுந்தரி
இத்தலத்தில் திரிபுர சுந்தரியை குழந்தை குமரித்தாயாக தரிசிக்கலாம். இங்கு தருணீ மகா திரிபுரசுந்தரி பருவ மங்கையாக, கன்னிபருவ குமரியாக, செப்புத் திருமேனியாக, நித்ய கல்யாண சுந்தரியாக, குமரி பருவத்தில் மூலஸ்தானத்தில் அபய வரத, அங்குச பாசமுடன் சர்வ அலங்காரத்தில் திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியாக காட்சியளிக்கின்றாள்.
பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சிவப்பு மலர் சாற்றி, மாவிளக்கு ஏற்றி ஆறு வாரம் வழிபட திருமணத்தடை நீ்ங்கும். அற்புதங்கள் நிகழும்.

ஸ்ரீமத் ஒளஷத லலிதா மஹா த்ரிபுரசுந்தரி (மூலிகை அம்மன்)
இந்த நூற்றாண்டின் முதல் மூலிகை திருமேனி, சர்வலோக மஹாராணி பராபட்டாரிக்கா, வாஞ்சா ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரி அன்னை, 16 திதி நித்யா படிகளின் மேல் மாடிசந்நிதியில் 9 அடி உயரத்தில் மூலிகைகள், பாணலிங்கம், சாளக்கிராமத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது சித்தர்களின் அருட்துணையுடன் ஸ்ரீஇராஜசேகர இளம் பூரணசிவம் (சாரியானந்தர்) அவர்களின் திருக்கரங்களால் எட்டு ஆண்டுகால கடின உழைப்பினால் செய்யப்பட்ட அற்புத உருவமாகும்.

ஸ்ரீமகா வாராகி
ஸ்ரீமத் லலிதையின் நாற்படை சேனாதிபதியாகவும், அகங்கார சொரூபமாகவும் போற்றப்படும் துர் லலிதை. தர்ம பாதையில் செல்பவர்களை காப்பவள். கிரி சக்கர ரதம் கொண்ட இவள், வராக முகத்துடன் சப்த மாதாக்களில் ஐந்தாவது. பஞ்சமி திதியில் தேங்காய் தீபம் ஏற்றும் பக்தர்களுக்கு துணை புரிவாள். மிளகு வடை, சக்கரை வள்ளி கிழங்கு, மஞ்சள் அபிஷேகம், செவ்வரளி, தாமரை, செம்பருத்தி, துளசி, வில்வம் ஆகியவை இவளின் பிரிய பொருட்கள். ஆஷாட நவராத்திரியில் மகிழ்ந்து அருள்பவள். நமது ஆலயத்தில், எட்டுக் கரங்களுடன் அங்க தேவியுடன், அற்புதமான கோலத்தில் மகா வாராகி ஜெய் வீர வாராகியாக தனிச் சந்நிதியில் வீற்றிருக்கின்றாள்.

ஸ்ரீ ராஜ சியாமளா (மாதங்கி தேவி)
ஸ்ரீமத் லலிதையின் மந்திரிணீ தேவி, மகாராணியின் கரும்பு வில்லின் அம்சமானவள்.
புத்தி தத்துவ ரூபிணீ, கல்வி கலைஞானம், அரசியல் அறிவு, மதி நுட்பம், அரசியலில் உயர்பதவி அருள்பவள்.
ஸ்ரீஇராஜ மாதங்கி எனும் இராஜ சியாமளா. கேய சக்கரத்தில் வீற்றிருப்பவள். தச மகா வித்யையில் இவளும் ஒருவள்.
பச்சை நிற புஷ்பங்கள், நறுமண பச்சை நிறமான மரு, தவனம், கதிர்பச்சை, வெண்தாமரை, பழச்சாறு, தேன் அபிஷேக பிரியை. இவள் லலிதையின் ராஜ்ய பாரத்தை தாங்குபவள்.

ஸ்ரீமகா காமேஸ்வர சுவாமி (ஸ்படிகலிங்கம்)
ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரியின் நேர் எதிரில், சர்வலோக நாயகன் கயிலாய வாசன் பரமேஸ்வரன் ஸ்படிக லிங்கமாக ஸ்ரீமகா காமேஸ்வரர் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். தினசரி நித்ய அபிஷேகமும், மாதந்தோறும் சிவராத்திரியில் சிறப்பு அபிஷேகமும், மாசி மஹா சிவராத்திரியில் சர்வாபரண அலங்கார ஆராதனைகளும் நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரி மூன்றாம் நாளில் ஸ்ரீகாமேஸ்வரர் உற்சவராக எழுந்தருளி, லலிதா மகா திரிபுர சுந்தரியுடன் திருக்கல்யாணம், மகா தீபம், பங்குனி உத்திர சிறப்பு தரிசனம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

தச மஹா வித்யா தேவிகள்
வட இந்தியாவின் காமாக்யாவிற்கு பிறகு, நமது ஸ்ரீமத் ஒளஷத லலிதா தர்பார் ராஜசபையில், மகா சக்தியான சோடஷி லலிதா திரிபுர சுந்தரி மூலிகை திருமேனியாக எழுந்தருளியுள்ளார்.
அவளின் அம்சமான மற்ற ஒன்பது மஹா வித்யாக்கள்: ஸ்ரீமகா காளி, ஸ்ரீதாரா, ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீதிரிபுர சுந்தரி, ஸ்ரீசின்ன மஸ்தா, ஸ்ரீபகளாமுகி, ஸ்ரீகமலாத்மிகா, ஸ்ரீமாதங்கி ஆகிய தேவியர்கள் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்.
இந்த சக்திகளுக்குரிய அவதார நாள்களில் விசேஷ அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அசாத்ய ஸ்ரீசக்ர குண்டம் - மகாமேரு
ஸ்ரீ அபிராமி அந்தாதியின் 97வது பாடலில் உள்ள ஸ்ரீவித்யா, உபாசகர்கள் சூழ்ந்த சதுர வடிவில், நடுவில் காமாட்சியுடன் அசாத்ய ஸ்ரீசக்ரம் அமைந்துள்ளது. மூலவரான பாலா முன்பாக தினசரி நித்ய பூஜைக்குரியதாக, ஸ்வாமிஜியின் கரங்களால் உருவாக்கப்பட்டு, காஞ்சியின் இரண்டாம் ஆவரணத்தின் செம்பாக்கம் வாலைக்கோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஒரே வேப்ப மரத்தால் ஆன ஸ்ரீசக்ரராஜ பூர்ண மகா மேரு மூலிகை அம்மன் சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். சகல தோஷங்களையும் நீக்கி, அம்பாளின் அருள் பெற ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஸ்ரீசக்ர நவாவரண பூஜை நடைபெறுகிறது.
பூஜைகள்
திங்கள் முதல் ஞாயிறு வரை
காலை 8.00 - 12.50மாலை 4.30 - 8.00
நித்யகால பூஜை : தினசரி காலை 8.00 மணிக்குள் மூலவர் பாலா, ஸ்ரீசக்ரம் அபிஷேக,
அலங்கார, அர்ச்சனை, மகா ஆரத்தி.
நித்யகால பூஜை முடிந்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
சிறப்பு வார பூஜை நாட்கள் : செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு.
மாத பூஜை நாட்கள் : பெளர்ணமி, பஞ்சமி திதி, சதுர்த்தசி திதி, மற்றும் பூரம் நட்சத்திரம்
இதர பூஜைகள்: மாவிளக்கு தீபம் ஏற்றுதல், புடவை சாத்துதல், பக்தர்கள் முன் பதிவு செய்து ஸ்ரீபாலா மூலவர் அபிஷேம்,
ஸ்ரீ வாராகி, ஸ்ரீசியாமளா, சுயம்வரகலா பார்வதி பூஜை, திதி நித்யா மூலமந்திர ஹோமங்கள்,
நவாவரண பூஜை - அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம்.
விஷேச நாட்கள்
தொடக்கம் | முடிவு | |
---|---|---|
திருப்புகழ் மகா மந்திர பூஜை (முழுநாளும் தொடர் அன்னதானம்) | 01/01/2025 | |
தை பொங்கல் தரிசனம் | 14/01/2025 | 16/01/2025 |
ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி உற்சவம் | தை அனைத்து வெள்ளிக்கிழமை (சுக்ரவாரம்) | |
தை ஸ்ரீஇராஜ மாதங்கி நவராத்திரி உற்சவம் | 28/01/2025 | 02/02/2025 |
வருஷாபிஷேகம் | 03/02/2025 | |
மாசி மகா சிவராத்திரி | 26/2/2025 மாலை முதல் நான்கு கால சிவலிங்க பூஜை | |
மாசி பெளர்ணமி ஸ்ரீலலிதா ஜெயந்தி ஒளஷத லலிதாம்பிகை நெய்குள தரிசனம் | 13/03/2025 | |
பங்குனி (வசந்தகால) ஸ்ரீலலிதா மகா நவராத்திரி பிரம்மோற்சவ பெருவிழா | 29/03/2025 | 12/04/2025 |
சித்திரை வருடப்பிறப்பு சிறப்பு ஆராதனை, அன்னதானம் | 14/04/2025 | |
சித்ரா பெளர்ணமி ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி மூலவருக்கு 108 குடம் பாலாபிஷேகம், சாகம்பரி அலங்காரம் |
12/05/2025 | |
ஆடி ஸ்ரீமகா வாராகி நவராத்திரி உற்சவம் | 24/07/2025 | 04/08/2025 |
ஆடிப்பூரம் வளையல் உற்சவம் | 28/07/2025 | |
கிருஷ்ண ஜயந்தி | 16/08/2025 | |
ஆவணி விநாயகர் சதுர்த்தி | 27/08/2025 | |
புரட்டாசி ஸ்ரீபாலா (சரத்) நவராத்திரி பிரம்மோற்சவ விழா | 21/09/2025 | 07/10/2025 |
ஐப்பசி பூரம் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி அவதார உற்சவம் | 18/10/2025 | |
ஆறுநாள் மகா கந்த சஷ்டி வேல் பூஜை | 22/10/2025 | |
மகா தீபம் & மகா காமேஸ்வரசுவாமி கார்த்திகை சோமவார திருமஞ்சனம் | 03/11/2025 | |
பிரதி மாத பெளர்ணமி (ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரி சந்நிதியில் நவாவரண பூஜை, மகா அபிஷேக சர்வ அலங்காரம், ஸ்ரீபாலா ஊஞ்சல் உற்சவம், மருந்து பிரசாதம், அன்னதானம் நடைபெறும்) |
மாலை 5.00 மணி முதல் 9.00 மணிக்குள் |
புகைப்படங்கள்
- அனைத்தும்
- பால திரிபுர சுந்தரி
- பத்ம அலங்காரம்
- நவ ராத்திரி
மேலும் விபரங்களுக்கு
ஆலய நிர்வாகம்
ஸ்ரீசக்ரராஜ பூர்ண மகா மேரு அறக்கட்டளை (பதிவு)
📜TEMPLE ADDRESS
- VAALAIKOTTAM
- Sripeedam Sri Bala Samasthanam
- Mooligai Amman Temple
- Thiruporur (OMR) to Chengalpattu Road,
- Near Jambugeswarar Temple, Sembakkam Village,
- Chengalpattu – 603108, Tamil Nadu.
CONTACT
- A. Ravikumar – 97899 21151
- S. Gurunathan – 94453 59228